உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / எவ்வித பாதிப்பும் இருக்காது; சிப்காட் நிர்வாகம் விளக்கம்

எவ்வித பாதிப்பும் இருக்காது; சிப்காட் நிர்வாகம் விளக்கம்

திருப்பூர்; தாராபுரத்தில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத நிறுவனங்கள் மட்டுமே அமையும் என, 'சிப்காட்' நிர்வாகம் தெரிவித்துள்ளது. தாராபுரம் அடுத்துள்ள கொளத்துப்பாளையத்தில், 1965ம் ஆண்டு முதல் கூட்டுறவு நுாற்பாலை இயங்கி வந்தது. கடந்த, 2013ல் மிகவும் நலிவடைந்த நிலையில் மூடப்பட்டது. அங்குள்ள, 57 ஏக்கர் நிலம் 'சிப்காட்' வளாகம் அமைக்க தேர்வு செய்யப்பட்டது. அப்பகுதியில், நேரடியாகவும், மறைமுகமாகவும், 10 ஆயிரம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், 'சிப்காட்' தொழிற்பூங்கா அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மக்களுக்கு எவ்வகையிலும் பாதிப்பு ஏற்படாத வகையில், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் இயங்கும் தொழிற்சாலைகள் நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது. 'சிப்காட்' நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சிப்காட்' நிறுவனம் வாயிலாக அமைக்கப்படும், தொழிற்பூங்காவில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத நிறுவனங்கள் மட்டும் அமைக்கப்படும். மின்னணு தொழில் நிறுவனங்கள், வாகன உதிரி பாகம் தயாரிக்கும் நிறுவனம், சோலார் மின்சக்தி தயாரிக்கும் நிறுவனங்கள், அரசு வழிகாட்டும் நெறிமுறைகளை பின்பற்றி நிறுவனங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், 10 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெறுவர்,' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி