உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருவள்ளுவர் திருக்கோட்டத்தில் திருக்குறள் திறனறி போட்டிகள்

திருவள்ளுவர் திருக்கோட்டத்தில் திருக்குறள் திறனறி போட்டிகள்

உடுமலை; உடுமலையில் உள்ள, திருவள்ளுவர் திருக்கோட்டத்தில் திருக்குறள் திறனறிப்போட்டிகள் நடந்தது.உடுமலையில், அய்யலு மீனாட்சி நகரில் உள்ள திருவள்ளுவர் திருக்கோட்டத்தில், 24ம் ஆண்டு விழா, திருவள்ளுவர் திருநாள் விழா நடந்தது. திருவள்ளுவர் திருக்கோட்டம் மற்றும் உடுமலை குட்டைத் திடலிலும் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.இதன் ஒரு பகுதியாக, பள்ளி மாணவர்களுக்கான, திருக்குறள் ஒப்புவித்தல், கட்டுரை, ஓவியம் என, கலை இலக்கியப் போட்டிகள் நடந்தது. இதில், 50க்கும் மேற்பட்ட, அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். ஊராட்சி தலைவர் பேச்சியம்மாள் தலைமை வகித்தார். உறுப்பினர் லிங்குசாமி முன்னிலை வகித்தார்.சிவசக்திகாலனி உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியர் புவனேஸ்வரி, எஸ்.வி.ஜி., மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் நர்மதா, பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் விஜயலட்சுமி, திருவள்ளுவர் திருக்கோட்ட நிர்வாகிகள் அருள் கணேசன், அருள்செல்வன், சிவக்குமார், கென்னடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை