வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சூப்பரான மாய்மால திட்டங்கள் எந்த பொது மக்களுக்கும் ஒன்றும் புரியாது ஆனால் தமிழில் பெயர் கொள்ளையடிக்க இது ஒரு வழி.
மேலும் செய்திகள்
விதை உற்பத்தியை கண்காணிக்கும் இணைய தளம்
17-Jul-2025
திருப்பூர்; 'திருக்குறளில் ஆர்வம், புலமை உள்ள ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுனர்கள் தேர்வு செய்யப்பட்டு, மாவட்டந்தோறும் தொடர் பயிலரங்கு, பயிற்சி வகுப்பு நடத்தப்படும்; திருக்குறள் திருப்பணிகள் தொடர்ந்து நடக்க திட்டம் வகுக்கப்படும்' என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில், திருக்குறள் திருப்பணிகள் திட்ட துவக்க விழா, நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. தங்கவேல், வரவேற்றார். திருப்பூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் இளங்கோ, பேசினார். திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) மணிமாறன், தலைமை வகித்து பேசினார்.எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன், திருப்பூர் முத்தமிழ்ச்சங்க தலைவர் செல்வராஜ், திருக்குறள் திருப்பணிகள் திட்ட பயிற்றுனர் பூங்கொடி, தமிழாசிரியர் கணேசன் ஆகியோர் பேசினர். நஞ்சப்பா நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கர்நல் நன்றி கூறினார். நிகழ்ச்சியில், 250க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
சூப்பரான மாய்மால திட்டங்கள் எந்த பொது மக்களுக்கும் ஒன்றும் புரியாது ஆனால் தமிழில் பெயர் கொள்ளையடிக்க இது ஒரு வழி.
17-Jul-2025