உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருமாங்கல்ய வழிபாடு

திருமாங்கல்ய வழிபாடு

திருப்பூர்; திருப்பூர் மாவட்ட யோகீஸ்வரர் சமுதாய பேரவை சார்பில், சிறப்பு வேள்வி மற்றும் திருமாங்கல்ய வழிபாடு நடந்தது.யோகீஸ்வரர் சமுதாய பேரவை சார்பில், 19ம் ஆண்டு திருமாங்கல்ய வழிபாடு நேற்று, திருப்பூர் கருப்பராய சுவாமி திருமண மண்டபத்தில் நடந்தது.உலக அமைதி, தொழில் வளம், விவசாயம் செழிக்கவும், குழந்தைகள் கல்வி ஞானம் பெறவும், உலக மக்கள் நலம் பெற வேண்டி, ஆண்டு தோறும் வழிபாடு நடத்தப்படுகிறது.நேற்று மாலை, 5:00 மணி முதல், சிறப்பு வேள்வி பூஜைகளும், அதனை தொடர்ந்து திருமாங்கல்ய பூஜைகளும் நடந்தது. நுாற்றுக்கணக்கான சுமங்கலி பெண்கள், திருமாங்கல்ய நோன்பில் பங்கேற்று வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி