உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்பூரை முன்னோடி மாவட்டமாக மாற்றணும்!

திருப்பூரை முன்னோடி மாவட்டமாக மாற்றணும்!

திருப்பூர்; 'அரசு திட்டங்களை சிறப்பாக செயல் படுத்தி, திருப்பூரை முன்னோடி மாவட்டமாக மாற்ற வேண்டும்,' என, கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.திருப்பூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். 15வது நிதிக்குழு மானியம், வேளாண்மை, தோட்டக்கலை, கூட்டுறவு சங்கங்கள், பால் உற்பத்தியாளர் சங்கங்கள், மருத்துவம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்சசி திட்டம், காலை உணவு, மதிய உணவு திட்டங்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, குடிநீர் திட்ட பணிகள், நெடுஞ்சாலைத்துறை உள்பட அனைத்து துறை சார்ந்த வளர்ச்சி பணிகளின் நிலை குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.'அனைத்து அரசு துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து, பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், சாலை, தெருவிளக்கு, மின்சாரம் உள்பட எல்லாவகையான அடிப்படை தேவைகளையும் உடனடியாக நிறைவேற்றவேண்டும். அரசின் வளர்ச்சி திட்டங்கள், அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைவதில், திருப்பூர் முன்னோடி மாவட்டமாக திகழவேண்டும். திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்' என, கலெக்டர் அறிவுறுத்தினார்.டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், மாநகராட்சி துணை கமிஷனர் சுல்தானா, துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) குமாரராஜா உட்பட அனைத்து அரசுத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி