மேலும் செய்திகள்
சுக்ரீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு வழிபாடு
19-Jul-2025
பல்லடம்; திருப்பூர் சத்யசாயி சேவா நிறுவனம் சார்பில், திருவிளக்கு பூஜை வழிபாடு பல்லடத்தில் நேற்று நடந்தது. ஸ்ரீசத்யசாயி பாபாவின், 100வது பிறந்த நாளை முன்னிட்டு, திருப்பூர் சத்யசாயி சேவா நிறுவனம், மாவட்டம் முழுவதும் திருவிளக்கு பூஜை வழிபாட்டை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பல்லடம் பொங்காளியம்மன் கோவிலில் நேற்று, 108 திருவிளக்கு பூஜை நடந்தது. திருவிளக்கு ஏற்றப்பட்டு, லலிதா சகஸ்ரநாமம் பாராயணமும், 108 அர்ச்சனையும் நடந்தது. தொடர்ந்து, பொங்காளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் பொங்காளி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பூர் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வரும் திருவிளக்கு பூஜையில், இது, 30வது வழிபாடாகும் என, சத்யாசாயி சேவா நிறுவன நிர்வாகிகள் தெரிவித்தனர். பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
19-Jul-2025