உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இது, ஊட்டி இல்ல... நம்ம திருப்பூரு தான்!

இது, ஊட்டி இல்ல... நம்ம திருப்பூரு தான்!

திருப்பூர்; திருப்பூரின் பல இடங்களில் நேற்று கடும் பனி மூட்டம் நிலவிய நிலையில், ஊட்டியின் 'குளுகுளு' காலநிலையை மக்கள் உணர்ந்தனர்.பொதுவாக, டிச., - ஜன., மாதங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். குறிப்பாக ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பிரதேசங்களில் உறைபனி தாக்கம் அதிகமாக இருக்கும். இந்தாண்டு, மிதவெப்ப மண்டல பகுதியான திருப்பூரில் கூட, பனியின் தாக்கத்தை மக்கள் உணர்கின்றனர். காலை மற்றும் இரவில், குளிர் அதிகம் தென்படுகிறது; பனியன், தொப்பி உள்ளிட்ட வெம்மையாடைகளை மக்கள் பயன்படுத்துகின்றனர்.நேற்று, திருப்பூரின் பல இடங்களில் பனி மூட்டம் அதிகமாக இருந்தது.குறிப்பாக, அவிநாசி சுற்றுவட்டார பகுதிகளில், எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு கூட, அடர்த்தியான பனி மூட்டம் தென்பட்டது. இதனால், 'ெஹட்லைட்' ஒளிரவிட்டபடி வாகனங்கள் இயங்கின. காலநிலை மாற்றத்தால் சளி, காய்ச்சல் பாதிப்புக்கு, பெருமளவு மக்கள் ஆளாகியுள்ளனர்; மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரித்திருக்கிறது. 'நீரை காய்ச்சி வடிகட்டி பருக வேண்டும்' என, உள்ளாட்சி நிர்வாகத்தினர் அறிவுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை