உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குடியிருப்பு பகுதியில் அச்சுறுத்தும் மின்கம்பம்

குடியிருப்பு பகுதியில் அச்சுறுத்தும் மின்கம்பம்

உடுமலை; குடியிருப்பு பகுதியில், அச்சுறுத்தும் மின்கம்பத்தை மாற்றியமைத்து, மின்விபத்தை தவிர்க்க கொடுங்கியம் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை ஒன்றியம், கொடுங்கியம் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. வீடுகளின் மின்வினியோகம் மற்றும் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்கள், போதிய பராமரிப்பின்றி உள்ளது.குறிப்பாக, கிராமத்தின் தலைவாசல் பகுதியில் ஒரு மின்கம்பம் மோசமான நிலையில் உள்ளது. தெருவிளக்கு மற்றும் வீடுகளுக்கான மின் ஒயர்கள் பொருத்தப்பட்ட இடத்தில், கம்பத்தில் கான்கிரீட் பூச்சு உதிர்ந்து, கம்பி மட்டுமே உள்ளது.ஆபத்தான நிலையிலுள்ள மின்கம்பத்தால், மின்விபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்யும் நிலையில், உடனடியாக மின்கம்பத்தை மாற்றி அமைக்க, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை