உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மூவர் படுகொலை; 850 பேர் விவரம் சேகரிப்பு: 14 தனிப்படைகள் தீவிர தேடுதல்

மூவர் படுகொலை; 850 பேர் விவரம் சேகரிப்பு: 14 தனிப்படைகள் தீவிர தேடுதல்

திருப்பூர்: திருப்பூர் அருகே, ஒரே குடும்பத்தை சேர்ந்த, மூன்று பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க, 14 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது. தமிழகம் முழுவதும் பழைய கொலை செய்து கொள்ளையில் ஈடுபட்ட, 850 பேரின் விபரத்தை சேகரித்து விசாரித்து வருகின்றனர்.திருப்பூர் மாவட்டம், பொங்கலுார், சேமலைகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் தெய்வசிகாமணி, 78. இவரது மனைவி அலமேலு, 75. தம்பதி தோட்டத்து வீட்டில் தங்கி விவசாயம் செய்து வந்தனர். இவரது மகன் செந்தில்குமார், 46. கடந்த, 29ம்தேதி அதிகாலை தந்தை, தாய், மகன் ஆகியோர் கொடூரமாக முகம் சிதைத்து கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இக்கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொடூர கொலை குறித்து அவிநாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தனிப்படை அமைக்கப்பட்டு, 'சிசிடிவி' பதிவு, பழைய குற்றவாளிகள் என, பல்வேறுகோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது:கொள்ளைக்காக நடந்த கொலையா அல்லது முன்விரோதம் போன்றவற்றுக்காக நடந்ததா என, பல கோணங்களில் விசாரணை நடக்கிறது. தற்போது வரை, 14 தனிப்படை அமைக்கப்பட்டு துரிதமாக விசாரணை நடக்கிறது. கடந்த, 15 நாட்களுக்கு முன், தோட்டத்தில் இருந்து நிறுத்தப்பட்ட நபரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்தனர். எவ்வித முன்னேற்றமும் இதுவரை ஏற்படவில்லை. கொலை சம்பவத்தை பார்க்கும் போது, சென்னி மலை, காங்கயம் உள்ளிட்ட பல இடங்களில் நடந்த கொலையுடன், தற்போது இந்த கொலையை ஒப்பிட்டத்தில், ஒரே மாதிரியான கொலை என்பது தெரிந்தது. இருப்பினும், கடந்த, 5 நாளாக மூன்று பேர் கொலை வழக்கில், எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. இதனால், திருப்பூர் மாவட்டத்தில் கடந்த, 2011 முதல், 2024 வரை பதிவான கொலை வழக்குகளின் விபரங்களை பெற்று, இதில் தொடர்புடையவர்கள் சம்பந்தப்பட்டு உள்ளனரா என்று விசாரிக்கின்றனர். இதுதவிர, தமிழகம் முழுவதும் உள்ள குற்றபதிவேடுகளில் இருந்து, 850 பேரின் விபரங்களை பெற்று, அதனுடன் பொருத்தி விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

karupanasamy
டிச 04, 2024 04:18

அண்ணாநகர் ரமேசு k5 வயது சிறுமி உட்பட குடும்பமே தற்கொலை செய்துகொண்டது என்று சொன்ன சன்டீவியை செய்தி சேகரிக்க அனுப்பினால் வழக்கை முடித்துவிடலாம்.


முக்கிய வீடியோ