உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல் பெண் உட்பட மூன்று பேர் பலி

டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல் பெண் உட்பட மூன்று பேர் பலி

அவிநாசி: அவிநாசி, சேவூர் அருகே இரண்டு டூவீலர்கள் நேருக்கு நேர் மோதியதில், மூன்று பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே சாணார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி 60. வாட்ச்மேனாக அருகிலுள்ள கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.அதே பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி மனைவி கன்னியாகுமரி 46. அவரது மகள் சுப்புலட்சுமி 23 ஆகிய இருவரையும் தனது டூவீலரில் அமர வைத்து, அன்னுார் நோக்கி நேற்று முன்தினம் மாலை சென்று விட்டு, மீண்டும் சத்தியமங்கலம் சென்று கொண்டிருந்தனர்.அப்போது, நீலிபாளையம் பகுதியில், ஈரோடு மாவட்டம், நம்பியூர் - சேந்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தறி குடோன் வேலைக்கு செல்லும் ராஜேஷ் குமார் 21, என்பவர் பைக் ஓட்டி வந்துள்ளார். அதில், ராஜேஷ் குமார் எதிரில் வந்த ரங்கசாமியின் பைக் மீது நேருக்கு நேர் மோதினார். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ராஜேஷ்குமார், ரங்கசாமி ஆகியோர் உயிரிழந்தனர்.பலத்த காயமடைந்த கன்னியாகுமரி மற்றும் சுப்புலட்சுமி இருவரையும் கோவை தலைமை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில், கன்னியாகுமரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கால் மற்றும் கழுத்துப் பகுதியில் முறிவு ஏற்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சுப்புலட்சுமி அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து சேவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ