உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கல்லுாரி மாணவருக்கு உதவிய விழுதுகள்

கல்லுாரி மாணவருக்கு உதவிய விழுதுகள்

திருப்பூர்; ஒற்றை பெற்றோராக உள்ள துாய்மைப் பணியாளர் குடும்பங்களைச் சேர்ந்த, கல்லுாரியில் பயிலும் மாணவர்களுக்கு விழுதுகள் அமைப்பு சார்பில், கல்வி உதவி தொகையாக தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. 20 மாணவர்களுக்கு மொத்தம் ஒரு லட்சம் ரூபாய் உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி திருப்பூர் அரோமா ஓட்டலில் நடந்தது. முன்னதாக, திட்ட மேலாளர் சந்திரா வரவேற்றார். நிறுவனர் தங்கவேல் உதவி தொகைகளை வழங்கினார். இந்த உதவி தொகை, விபத்து மற்றும் உடல் நலம் பாதித்து உயிரிழந்த துாய்மைப் பணியாளர் குடும்பங்களைச் சேர்ந்த கல்லுாரி மாணவர்கள் 20 பேருக்கு வழங்கப்பட்டது. திட்ட மேலாளர் கோவிந்தராஜ் நன்றி கூறினார். சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி