உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வனத்துக்குள் திருப்பூர்-11 திட்டம் 57 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு

வனத்துக்குள் திருப்பூர்-11 திட்டம் 57 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு

உடுமலை: வனத்துக்குள் திருப்பூர் திட்டம் - 11ல், உடுமலை பகுதிகளில், 57 ஆயிரத்து, 673 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தை பசுமையாக்கும் வகையில், வனத்துக்குள் திருப்பூர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நடப்பாண்டு, 11வது திட்டத்தில், 3 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயித்து, கடந்த மார்ச் 1ல் பணிகள் துவங்கின. மாவட்டத்தில், நேற்றுமுன்தினம் வரை, ஒரு லட்சத்து, 43 ஆயிரத்து, 519 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இதில், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதியிலுள்ள விவசாயிகள், பசுமை ஆர்வலர்கள் வாயிலாக,, 57 ஆயிரத்து, 673 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், உடுமலை, பெதப்பம்பட்டி, மூங்கில் தொழுவைச்சேர்ந்த விவசாயிகள் மணி வேல் துரை, மாரிமுத்து ஆகியோருக்கு சொந்தமான நிலத்தில், 500 மகாகனி மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. மடத்துக்குளம், குமரலிங்கம், ராமசாமி, செந்தில் ஆகியோருக்கு சொந்தமான நிலத்தில், 1,500 பாக்கு மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. பெதப்பம்பட்டி, சவுந்தராஜூக்கு சொந்தமான நிலத்தில், 600 மகா கனி, 200 சந்தனம், 25 கூந்தல் பனை என, 825 மரக்கன்றுகள் நடவு செய்து தரப்பட்டது. வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின் கீழ், விவசாய நிலங்கள், கோழிப்பண்ணை, தொழிற்சாலை வளாகங்கள், பள்ளி, கல்லுாரி, கோவில் வளாகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான நிலங்களில், இலவசமாக மரக்கன்றுகள் நடவு செய்து தரப்படுகிறது. மரக்கன்றுகள் நடவு செய்து, பாதுகாப்பாக வளர்த்து, பசுமை பரப்பு அதிகரிக்கும் ஆர்வமுள்ளவர்கள், 90474 56666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என திட்ட குழுவினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை