திருப்பூர் ரன்னர்ஸ் மாரத்தான் போட்டி
திருப்பூர்; ஆரோக்கியம், உடற் பயிற்சி தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட, திருப்பூர் ரன்னர்ஸ் மாரத்தானில், 5,500 பேர் பங்கேற்றனர். திருப்பூர் ரன்னர்ஸ் குழுவின் ஏற்பாட்டில் ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருப்பூர் ரன்னர்ஸ் மாரத்தான் விழா அலகுமலையில் நடந்தது. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் உற்சாகமாக பங்கேற்றனர். மூன்று பிரிவுகளின் மாரத்தான் நடந்தது. ஐந்து கிலோ மீட்டர் ஓட்டத்தில், 3,335 பேர், 10.5 கி.மீ., ஓட்டத்தில், 1,646 பேர் மற்றும் 21 கி.மீ., ஓட்டத்தில், 487 பேர் என, 5,468 பேர் பங்கேற்றனர். அனைவருக்கும் சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, திருப்பூர் ரன்னர்ஸ் குழுவுடன் சேர்ந்து, டாப்லைட், டெக்னோஸ்போர்ட், அபி ஸ்கேன்ஸ் அன்ட் லேப்ஸ், சோனி சென்டர், ஏ.எம்.சி., சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் என்.வி.,லேன்ட்ஸ் ஆகியோர் செய்திருந்தனர்.