உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அ.தி.மு.க ஆட்சி வந்தாலே திருப்பூர் வளர்ச்சி அடையும்

அ.தி.மு.க ஆட்சி வந்தாலே திருப்பூர் வளர்ச்சி அடையும்

பெருமாநல்லுார்; திருப்பூர் மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில், பெருமாநல்லுாரில் திண்ணைப்பிரசாரம் நடந்தது. பேரவை மாநகர் மாவட்ட செயலாளர் லோகநாதன், தலைமை வகித்தார். இணை செயலாளர் சந்திரசேகர், முன்னிலை வகித்தார். ஒன்றிய இணை செயலாளர் சுரேஷ் வரவேற்றார். திருப்பூர் எம்.எல்.ஏ. விஜயகுமார் பேசுகையில், ''திருப்பூருக்கு தேவையான அனைத்து திட்டங்களும் அ.தி.மு.க ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டன. தி.மு.க ஆட்சியில் திருப்பூருக்கு எந்த திட்டமும் கொண்டு வரப்படவில்லை. திருப்பூர் வளர்ச்சி அடைய அ.தி.மு.க ஆட்சிக்கு வர வேண்டும். அதற்காக நாம் பாடுபட வேண்டும்'' என்றார். முன்னாள் எம்.பி சிவசாமி, மாவட்ட இணை செயலாளர் சங்கீதா, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் வேல் குமார், ஒன்றிய அவை தலைவர் ஐஸ்வரிய மகராஜ், மாநகர பகுதி செயலாளர்கள் கனகராஜ், நாச்சிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை