உள்ளூர் செய்திகள்

த.மா.கா., ஆண்டு விழா

பல்லடம்: பல்லடம் நகர வட்டார த.மா.கா., சார்பில், 11வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.விழாவுக்கு, பல்லடம் நகரத் தலைவர் முத்துக்குமார் தலைமை வகித்தார். வட்டாரத் தலைவர் சுப்பிரமணியம் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் ராமசாமி, மாவட்ட துணை தலைவர் ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் அன்சாரி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கார்த்தி, நகரப் பொருளாளர் பொன்னையன், துணைத் தலைவர் ராஜசேகர், பொதுச் செயலாளர் ராமசாமி, இளைஞரணி செயலாளர் உத்தேஷ் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !