உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மகள்களின் சுதந்திரம் எந்த எல்லை வரை?

மகள்களின் சுதந்திரம் எந்த எல்லை வரை?

''மகள்கள் அடிமையாக இருக்கக்கூடாது என்று பெற்றோர் எண்ணுவதில் தவறில்லை. அதேசமயம் குடும்பத்தினரைப் புரிந்துகொண்டு நடக்க வேண்டும் என்பதையும் சொல்லி வளர்க்கவேண்டும்'' என்று கூறுகிறார், திருப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுகன்யா.அவர் கூறியதாவது:இன்றைய சூழ்நிலையில் குடும்பத்தில் மகன், மகள் இருவரும் இருந்தாலும், தந்தைக்கு பெரும்பாலும் மகள்களே செல்லப்பிள்ளையாக இருக்கின்றனர். தற்போது பெண்களுக்கு அனைத்து வகையிலும் சுதந்திரம் உள்ளது. படிப்பு, உடை உள்ளிட்ட அனைத்திலும் தங்கள் விருப்பப்படி நடக்கின்றனர். பெற்றோர்களும் அனுமதிக்கின்றனர். திருமணத்திலும் சில இடங்களில் மகள்களின் சுதந்திரத்தை அனுமதிக்கின்றனர். ஆனால் வக்கீல் என்ற முறையில் பல முறை இந்த செல்ல மகள்களின் பொறுப்பற்ற தனத்தை பார்த்து எனக்கு கோபம் வருகிறது. அதைத் தடுக்க முடியாமல் பெற்றோர் மனவேதனை அடைகின்றனர். மகள்கள் அடிமையாக இருக்கக்கூடாது என பெற்றோர்கள் எண்ணுவது தவறில்லை. ஆனால் அக்கம்பக்கத்தினர் மற்றும் குடும்பத்தினரைப் புரிந்துகொண்டு நடக்க வேண்டும் என்பதையும் சொல்லி வளர்க்க வேண்டும்.இவ்வாறு, சுகன்யா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !