பள்ளி கல்லூரிக்கு இன்று விடுமுறை
திருப்பூர் : மழை காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழை காரணமாக, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லுாரிகளுக்கு, இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக, கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவித்துள்ளார்.