மேலும் செய்திகள்
இன்று இனிதாக (19.07.2026) திருப்பூர்
19-Jul-2026
ஆன்மிகம் சதுர்த்தி சிறப்பு பூஜை சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை, ஸ்ரீ ரத்தின விநாயகர் கோவில், எஸ்.ஆர். நகர், மங்கலம் ரோடு, திருப்பூர். கணபதி ேஹாமம், மூலவர் அபிேஷகம், சங்கல்பம், மகா தீபாராதனை - மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், கரட்டாங்காடு, தாராபுரம் ரோடு, திருப்பூர். மகா அபிேஷகம் - மாலை 6:30 மணி. சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் - இரவு 7:00 மணி. பொங்கல் விழாஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ கன்னிமார், ஸ்ரீ கருப்பராயன், ஸ்ரீ ஆதிபராசக்தி கோவில், தண்ணீர் பந்தல் காலனி, அனுப்பர்பாளையம், அவிநாசி ரோடு, திருப்பூர். சிறப்பு அலங்கார பூஜை - இரவு 7:00 மணி. பொட்டுச்சாமிக்கு பொங்கல் வைத்தல் - இரவு 11:00 மணி. ஆன்மிக சொற்பொழிவு திருவாசகம் விளக்க உரை ஆன்மிக சொற்பொழிவு, ஸ்ரீ வியாஸராஜர் பஜனை மடம், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. சொற்பொழிவாளர்: அப்பரடிப்பொடி சொக்கலிங்கம். மாலை, 6:00 மணி முதல் இரவு, 8:00 வரை. தொடர் முற்றோதுதல்பன்னிரு திருமுறை தொடர் முற்றும் ஓதுதல், திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: சைவ சித்தாந்த சபை. மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை. பொதுகம்பன் விழா 2026'கம்பன் புகழ்பாடி கன்னித்தமிழ் வளர்போம்' எனும் தலைப்பில், கம்பன் விழா, ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், யுனிவர்சல் தியேட்டர் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் கம்பன் கழகம். மாலை 5:00 மணி. கம்பன் எனும் கொம்பன் சொல்லரங்கம், கம்பன் காவியத்தில் கற்போர் மனதை பெரிதும் ஈர்ப்பவர்கள் அயோத்தி வாசிகளா, கிஷ்கிந்தை வாசிகளா, இலங்கை வாசிகளா எனும் தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் - மாலை 6:30 மணி. இலவச மருத்துவ முகாம்இலவச கண் சிகிச்சை, இருதய பரிசோதனை, பொது மருத்துவ முகாம், லயன்ஸ் கிளப் பார்மஸி வளாகம், திருப்பூர். ஏற்பாடு: சென்டரல் லயன்ஸ் கிளப் அறக்கட்டளை, ரேவதி மெடிக்கல் சென்டர், திருப்பூர் ஐ பவுண்டேசன் கண் மருத்துவமனை. காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை. சந்திப்பு கூட்டம்சமூக வலைதள பொறுப்பாளர் ஆலோசனை கூட்டம், போலோ லவுஞ்ச் ரெஸ்டாரென்ட், மங்கலம் ரோடு, அவிநாசி. ஏற்பாடு: வீ த லீடர்ஸ் அமைப்பு. மாலை 3:30 மணி. ரத்த தான முகாம்ஸ்ரீ சரண் மருத்துவமனை, போயம்பாளையம் பிரிவு, திருப்பூர். ஏற்பாடு: வலிமை சேவை அமைப்பு. காலை 9:30 முதல் மதியம் 1:00 மணி வரை. இலவச மருத்துவ முகாம்இலவச எலும்பு மற்றும் மூட்டு மருத்துவ முகாம், ஐகான் எலும்பு மூட்டு மருத்துவமனை, ராக்கியபாளையம் பிரிவு, காங்கயம் ரோடு, திருப்பூர். காலை 9:00 மணி முதல். விளையாட்டுமாரத்தான் போட்டிடாப்லைட் திருப்பூர் ரன்னர்ஸ் மாரத்தான் போட்டி, ஸ்ரீ வேலவன் மஹால், அலகுமலை. ஏற்பாடு: திருப்பூர் ரன்னர்ஸ் அமைப்பு, டாப்லைட் திருப்பூர் ரன்னர்ஸ். அதிகாலை 5:30 மணி. மாநில கூடைப்பந்துஆண்கள், பெண்கள் மாநில கூடைப்பந்து இறுதி போட்டி, நஞ்சப்பா பள்ளி மைதானம், தாராபுரம் ரோடு, திருப்பூர். எஸ்.டி.ஏ.டி. மைதானம், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: தமிழ்நாடு கூடைப்பந்து அசோசியேஷன், திருப்பூர் மாவட்ட கூடைப்பந்து கழகம். காலை 9:00 மணி முதல்.
19-Jul-2026