உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்றும், நாளையும் 80 சிறப்பு பஸ் இயக்கம்  

இன்றும், நாளையும் 80 சிறப்பு பஸ் இயக்கம்  

திருப்பூர்: வார விடுமுறை நாட்களில் வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக, இன்றும், நாளையும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இன்று கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் இருந்து 40 சிறப்பு பஸ்களும், மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து 15 பஸ்களும், புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து 25 பஸ்களும் இயக்கப்பட உள்ளன. நாளை கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் இருந்து 25 சிறப்பு பஸ்களும், புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து 15 பஸ்களும், மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து 15 பஸ்களும் இயக்கப்பட உள்ளன. இரு தினங்களிலும் திருப்பூரில் இருந்து சென்னைக்கு 5 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். மேலும், பயணிகள் கூட்டத்துக்கு ஏற்ப பழநி, திருச்செந்துார், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கும் கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை