மேலும் செய்திகள்
தமிழகத்தில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி
15-Feb-2025
திருப்பூர்: திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு உழவர் சந்தை, தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கான தக்காளி வரத்து ஒரே நேரத்தில் அதிகரித்துள்ளது.கடந்த ஒரு மாதமாக வரத்து குறையாமல் தொடர்வதால், 35 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி விலை, பத்து நாட்களுக்கு முன், கிலோ, 25 ரூபாயாகியது. தொடர்ந்து வரத்து அதிகரித்து கொண்டே இருப்பதால், உழவர் சந்தையில் நேற்று தக்காளி கிலோ, 15 ரூபாயாகியது.மொத்த விலையில், 14 கிலோ கொண்ட சிறிய கூடை, 180 ரூபாய்க்கும், 26 கிலோ கொண்ட பெரிய கூடை, 350 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. முதல் தர தக்காளியின் விலை குறைந்த நிலையில், கர்நாடகா, ஆந்திர மாநிலத்தில் இருந்து விற்பனைக்கு வரும் தக்காளி விலை கிலோ, 12 ரூபாயாக குறைந்துள்ளது. வரத்து அதிகரித்தால், தக்காளி விலை ஒற்றை இலக்கத்துக்கு, (பத்து ரூபாய்க்கும்) கீழ் வர வாய்ப்புள்ளது என்கின்றனர், மொத்த வியாபாரிகள். இது ஒருபுறம் இருக்க அதிகளவில் தக்காளி பயிரிட்டுள்ள விவசாயிகள், தற்போது தக்காளி பறிப்பு கூலிக்கு போதியதாக இல்லை என புலம்ப துவங்கியுள்ளனர்.
15-Feb-2025