உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆற்றில் கொட்டப்பட்ட தக்காளி; கடும் விலை வீழ்ச்சி எதிரொலி

ஆற்றில் கொட்டப்பட்ட தக்காளி; கடும் விலை வீழ்ச்சி எதிரொலி

திருப்பூர்; விலை வீழ்ச்சியால், ஜம்மனை ஓடையில், விவசாயிகள் தக்காளியை கொட்டி சென்றனர். திருப்பூர் மாவட்டத்தில், பல்லடம், பொங்கலுார், அவிநாசி உட்பட பல பகுதிகளில் அதிகளவில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது. தற்போது தக்காளி விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. ரகத்தை பொறுத்து, 5 கிலோ, 100 ரூபாய், 7 கிலோ, 100 ரூபாய் என, இடத்துக்கேற்றவாறு, தக்காளி சில்லரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால், விவசாயிகளுக்கு மிகக்குறைந்த விலையே கிடைப்பதால், நஷ்டம் எதிர்கொள்வதாக, விவசாயிகள் கூறுகின்றனர். அவ்வகையில், திருப்பூர், தாராபுரம் ரோட்டில், உள்ள ஜம்மனை ஓடையில், விற்பனை ஆகாத தக்காளி கொட்டப்பட்டுள்ளது. விவசாயிகள் சிலர் கூறுகையில், 'தக்காளி விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. போக்குவரத்து செலவினத்தை ஈடு செய்வது கூட கடினமாக உள்ளது. எனவே, விற்பனையாகாமல் தேங்கும் தக்காளியை, வெவ்வேறு இடங்களுக்கு வாகனங்களில் எடுத்து செல்வதால் போக்குவரத்து செலவினம் அதிகரிப்பதோடு, தக்காளி விற்பனையாகாமல் தேங்கினால், பெரும் நஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதனால், தக்காளிகளை ஜம்மனை ஓடையில் கொட்டினோம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை