உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிறுவர் பூங்காவை புதுப்பிக்கணும்;  சுற்றுலா பயணியர் வலியுறுத்தல் 

சிறுவர் பூங்காவை புதுப்பிக்கணும்;  சுற்றுலா பயணியர் வலியுறுத்தல் 

உடுமலை; திருமூர்த்தி அணை அருகிலுள்ள சிறுவர் பூங்காவை புதுப்பித்து, அனைத்து நாட்களிலும் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என, சுற்றுலா பயணியர் அறிவுறுத்தியுள்ளனர்.உடுமலை அருகே, திருமூர்த்திமலை ஆன்மிக மற்றும் சுற்றுலா தலமாக உள்ளது. பஞ்சலிங்க அருவி, அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு சென்று விட்டு, திரும்பும் சுற்றுலா பயணியருக்கு, வேறு, பொழுதுபோக்கு இடம் இல்லை.இதனால், சில ஆண்டுகளுக்கு, முன், பொதுப்பணித்துறை சார்பில், காண்டூர் கால்வாய் அருகே, சிறுவர் பூங்கா ஏற்படுத்தப்பட்டது.விளையாட்டு உபகரணங்களுடன், பயன்பாட்டில், இந்த பூங்கா இருந்தது. இந்த பூங்காவுக்கு எதிரில், பெரிய மரத்தடியில், மக்கள் அமரும் இருக்கையுடன், கால்நடைகள் சிலைகளுடன், சிறிய பூங்கா உருவாக்கப்பட்டது.இந்த இரு பூங்காக்களும் போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. அனைத்து நாட்களும் பூங்கா திறக்கப்படுவதில்லை. எனவே, பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணியர், பூங்காவை பயன்படுத்த முடியாமல் ஏமாற்றமடைகின்றனர். எனவே, பொதுப்பணித்துறையினர் பூங்காவை முழுமையாக புதுப்பித்து, அனைத்து நாட்களிலும் சுற்றுலா பயணியர் பயன்பாட்டுக்கு திறக்க, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !