மேலும் செய்திகள்
த.மா.கா., உறுப்பினர் சேர்க்கை முகாம்
11-Nov-2024
அனுப்பர்பாளையம்: திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கத்தின் நிர்வாக குழு கூட்டம் போயம்பாளையத்தில் நடைபெற்றது.தலைவர் சரவணன் தலைமை வகித்தார். செயலாளர் வெள்ளையப்பன், முன்னிலை வகித்தார். பொருளாளர் ராஜ் செல்வம், வரவேற்றார். நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, நுகர்வோர் உரிமைகள் அதன் நன்மைகள் முறையிட வேண்டிய வழிமுறைகள் ஆகியவை குறித்து பொதுமக்களிடம் அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.துணைத் தலைவர்கள் சின்னத்துரை, கமலக்கண்ணன், துணை செயலாளர்கள் ரமேஷ்குமார், கணபதி, பொதுக்குழு உறுப்பினர்கள் ஜோதிமணி, சுரேஷ், செயற்குழு உறுப்பினர்கள் காந்திமதி, சித்திரை செல்வி உட்பட பலர் பங்கேற்றனர்.
11-Nov-2024