மேலும் செய்திகள்
தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்
21-May-2025
திருப்பூர் : திருப்பூர் மாவட்ட தொழிற்சங்கங்களின் கூட்டம், ஊத்துக்குளி ரோட்டிலுள்ள ஏ.ஐ.டி.யு.சி, அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட பொதுச்செயலாளர் நடராஜன் தலைமை வகித்தார். பனியன் பேக்டரி லேபர் யூனியன் (ஏ.ஐ.டி.யு.சி.,) பொதுச்செயலாளர் சேகர், சி.ஐ.டி.யு., மாவட்ட பொதுச்செயலாளர் ரங்கராஜ், மாவட்ட தலைவர் சம்பத் மற்றும் எல்.பி.எப்., - ஐ.என்.டி.யு.சி., - எச்.எம்.எஸ்., - எம்.எல்.எப்., நிர்வாகிகள் பங்கேற்றனர்.அனைத்து தரப்பு தொழிலாளர்களுக்கும், குறைந்தபட்சம் மாதம் 26 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கவேண்டும். மாதம் ஒன்பதாயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் ஜூலை 9ம் தேதி, நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தம் நடத்தப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் வேலை நிறுத்தத்தை வெற்றிபெறச்செய்யவேண்டும். அனைத்து கட்சிகள், வியாபாரிகள் சங்கங்களுக்கு ஆதரவு கேட்டு கடிதம் அனுப்பவேண்டும். வேலை நிறுத்தம் தொடர்பாக பிரசாரம் செய்வதற்காக, 200 பேர் கொண்ட பிரசார குழு அமைக்கவேண்டும். வரும் 18ம் தேதி, ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்கும் திட்டமிடல் கூட்டத்தை, திருப்பூரில் நடத்தவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
21-May-2025