உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

உடுமலை; உடுமலை நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு, ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில், அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. உடுமலை - தாராபுரம் ரோட்டில், நுாறு ஆண்டுகளுக்கு மேலாக இருந்த பஸ் ஸ்டாப்பை, தனி நபருக்காக அகற்றிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம் என்ற பெயரில், ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபடுகின்றனர். நகரின் பிரதான ரோடுகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ள நிலையில், ரோட்டோரம் வாடகைக்காக காத்திருக்கும் மினி டோர் டிரைவர்களை மிரட்டி, ஒரு சில நிறுவன உரிமையாளர்களுக்காக செயல்படும் மடத்துக்குளம் உதவி கோட்ட அதிகாரிகளை கண்டித்தும், உ டுமலை நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன், சி.ஐ.டி.யு., ஆட்டோ மொபைல் லேபர் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார். முகம்மது ஹக்கீம், திருமலைசாமி, ரமேஷ்குமார் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு., மாவட்ட துணை செயலாளர் ஜெகதீசன், அன்பு, மாவட்ட தலைவர் விஸ்வநாதன், ஆட்டோ சங்க செயலாளர் ஜகாங்கீர், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பஞ்சலிங்கம், பஞ்சாலை தொழிலாளர் சங்கம் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை