உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 18ல் கடையடைப்பு வியாபாரிகள் தீர்மானம்

18ல் கடையடைப்பு வியாபாரிகள் தீர்மானம்

அனுப்பர்பாளையம்: திருப்பூர் வடக்கு ஒன்றிய அனைத்து வியாபாரிகள் நல சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.தலைவர் தியாகராஜன் தலைமை வகித்தார். செயலாளர் சந்திரசேகர், முன்னிலை வகித்தார். பொருளாளர் கண்ணன், வரவேற்றார். கூட்டத்தில், வாடகை கடைகளுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி வரி விதிக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, 18ம் தேதி திருப்பூர் அனைத்து வியாபாரிகள் நடத்தும் கடையடைப்பு போராட்டத்துக்கு முழு ஆதரவு தெரிவித்து, கடைகளை அடைப்பது, என முடிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை