மேலும் செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்துாரில் பலத்த மழை
15-Oct-2024
திருப்பூர்: நகரில் பெய்த தொடர் மழை காரணமாக ரோட்டில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. பார்க் ரோட்டில் மரம் சாய்ந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.திருப்பூரில் நேற்று மாலை, 4:00 மணியளவில் துவங்கிய மழை தொடர்ந்து பெய்தது. தாழ்வான பகுதிகள், பி.என்., ரோடு புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, ஈஸ்வரன் கோவில் பாலம், காலேஜ் ரோட்டில் உள்ள ரயில்வே சுரங்க பாலம் போன்ற பல இடங்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சுரங்க பாலம் மழைநீரில் மூடியது.பெரும்பாலான இடங்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடிய காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பார்க் ரோட்டில் உள்ள பழமையான வேப்ப மரம் சாய்ந்து விழுந்தது. இதனால், அந்த ரோட்டில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தகவலறிந்து சென்ற போக்குவரத்து போலீசார், வடக்கு தீயணைப்பு வீரர்கள் மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால், மின்சாரம் தடைபட்டது. ஆய்வுக் கூட்டம்
பருவமழை முன்னேற்பாடு குறித்து கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நிர்மல்ராஜ், கலெக்டர் கிறிஸ்துராஜ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கும் பகுதிகளின் விவரம் குறித்தும், பாதிக்கப்பட்ட மக்களை தங்கவைப்பதற்காக, 52 நிவாரண முகாம்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.
15-Oct-2024