உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தபால் நிலையத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு

தபால் நிலையத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு

திருப்பூர்; திருப்பூர், அவிநாசி ரோடு, காந்தி நகர் தபால் நிலைய கண்காணிப்பாளர் அறிக்கை: தபால் துறை, மக்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அதில், ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக, ரயில்வே துறையுடன் இணைந்து, தபால் நிலையத்தின் வாயிலாகவே ரயில் டிக்கெட் முன்பதிவு பெறும் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. திருப்பூர், காந்தி நகர் தபால் நிலையத்தில் இந்த சேவை துவ ங்கப்பட்டுள்ளது. ரயில் டிக்கெட் முன்பதிவு, தட்கல் முன்பதிவு சேவைகளை, எளிதாக பெற முடியும். மேலும், விபரங்களுக்கு 0421- 2486288 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி