உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திறன்மிகு தொழிலாளர் சாயத்தொழிலில் உருவாக்க பயிற்சி மையம்

திறன்மிகு தொழிலாளர் சாயத்தொழிலில் உருவாக்க பயிற்சி மையம்

திருப்பூர் : திருப்பூர் சாய ஆலை உரிமையாளர் சங்க வளாகத்தில், சாயத்தொழிலில் திறன்வாய்ந்த தொழிலாளர்களை உருவாக்கும் வகையில், பயிற்சி மையம் நேற்று துவங்கப்பட்டது. ''ஒரு மாதகாலத்துக்கு இலவச பயிற்சி அளிக்கப்படும்'' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் சாயத்தொழில் வளர்ச்சிக்காக, திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சாயத்தொழிலில், திறமையான தொழிலாளர்களை உருவாக்கும் வகையில், சங்க அலுவலகத்தில் நேற்று பயிற்சி மையம் துவங்கப்பட்டுள்ளது.அத்துடன், செயல்முறை பயிற்சி அளிக்க ஏதுவாக, பரிசோதனைக்கூடமும் அமைக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி மையம் மூலம், சாய ஆலைகளுக்கு தேவையான, 'லேப் டெக்னீசியன்'களை தயார்படுத்தும் வகையில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் பயிற்சி பெறுவோர், பயிற்சி காலம் முடிந்ததும் நேரடியாக சாய ஆலைகளில் பணியில் அமர்த்தப்படுவர் என, நிர்வாகிகள் தெரிவித்தனர்.நேற்று நடந்த விழாவில், நேரடி பயிற்சி மையத்தை, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிறுவன தலைவர் சக்திவேல் திறந்து வைத்தார். இரண்டாவது மாடியில் செயல்படும் 'சிட்ரா'வின் பரிசோதனை கூடத்தை, ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்பிரமணியன் திறந்துவைத்தார். சங்கத் தலைவர் காந்திராஜன் கூறுகையில்,''பயிற்சி மையத்தில், ஒரு மாதகாலத்துக்கு, இலவசமாக பயிற்சி அளிக்கப்படும். புதிய தொழிலாளர்களை உருவாக்குவது மட்டுமல்லாது, தற்போதுள்ள தொழிலாளருக்கு திறன் வளர்ப்பு பயிற்சியும் அளிக்கப்படும்,'' என்றார்.---திருப்பூர் சாய ஆலை உரிமையாளர் சங்க வளாகத்தில், திறன் வாய்ந்த தொழிலாளர்களை உருவாக்க பயிற்சி மையம் மற்றும் பரிசோதனைக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதை திறந்து வைத்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க நிறுவன தலைவர் சக்திவேல் பார்வையிட்டார். அருகில் சாய ஆலை உரிமையாளர் சங்கத் தலைவர் காந்திராஜன் உள்ளிட்டோர்.

வெளி மாநில தொழிலாளருக்கு

திருப்பூரில் பயிற்சித்திட்டம்திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிறுவன தலைவர் சக்திவேல் பேசுகையில், ''மத்திய, மாநில அரசுகள் வாயிலாக, மானியத்துடன் சோலார் கட்டமைப்பை நிறுவும் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். பல்வேறு சவால்களை சந்தித்து வந்த பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டது; மூன்று மாதங்களில், 12 சதவீதம் வளர்ச்சி கிடைத்துள்ளது. தற்போது, திருப்பூர் தொழில்துறையினர் உற்சாகத்துடனும், உத்வேகத்துடனும் இயங்கி வருகின்றனர். விரைவில், பிரிட்டனுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் நிறைவேற வாய்ப்புள்ளது. வெளிமாநில தொழிலாளர்களுக்கு, ஒரு மாதம் சொந்த மாநிலத்திலும், இரண்டு மாதங்கள் திருப்பூர் பனியன் நிறுவனங்களிலும் பயிற்சி அளிக்கும் திட்டம் விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ