உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தி.மு.க.,வினருக்கு பயிற்சி

தி.மு.க.,வினருக்கு பயிற்சி

திருப்பூர : அனைத்து தொகுதிகளிலும், உள்ள ஓட்டுச் சாவடி வாரியாக, ஆயிரம் வாக்காளர்களில் குறைந்தபட்சம், 300 பேர் தி.மு.க.,வில் புதிய உறுப்பினராக இணைக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.உறுப்பினர் சேர்க்கை முகாமை, ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் அனைத்து பூத்களிலும் துவங்கி துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதற்காக கட்சியின் ஐ.டி., விங் நிர்வாகிகள் புதிய செயலியை வடிவமைத்துள்ளனர். இதற்காக பூத் கமிட்டி நிர்வாகிகளுக்குபயிற்சி முகாம் நடத்தப்பட்டது.திருப்பூர் மத்திய மாவட்டம் சார்பில் இம் முகாம் மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமையில் நேற்று பொங்கலுாரில் நடந்தது.வடக்கு மாவட்ட செயலாளர் தினேஷ்குமார் தலைமையில், அவிநாசி தொகுதிக்கான பயிற்சி முகாம் சேவூரில் நேற்று நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ