உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விவசாயிகளுக்கு பயிற்சி

விவசாயிகளுக்கு பயிற்சி

அவிநாசி; அவிநாசியில், மத்திய பட்டு வாரியம் மற்றும் தமிழக அரசின் பட்டு வளர்ச்சி துறை இணைந்து, 'என் பட்டு என் பெருமை' என்ற பட்டு வளர்ப்பு தொழில்நுட்ப பரிமாற்றத் திட்டத்தின் பயிற்சி முகாம் நடைபெற்றது. பட்டு வளர்ச்சி துறை உதவி இயக்குனர் செல்வி தலைமை வகித்தார். மத்திய பட்டு வாரியத்தின் 'டி' பிரிவு விஞ்ஞானி முனைவர் ஞானகுமார் டேனியல் பேசினர். அவிநாசி தொழில்நுட்ப சேவை மைய உதவி ஆய்வாளர் மேனகா வரவேற்றார். அன்னுார் பகுதி உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி, சேவூர் இளநிலை ஆய்வாளர் காந்தி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர் செல்லையா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை