உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வெளிமாவட்ட இளைஞர்களுக்கு பயிற்சி

வெளிமாவட்ட இளைஞர்களுக்கு பயிற்சி

- நமது நிருபர் -தமிழக அளவில், வேலைவாய்ப்பு குறைவான மாவட்டங்களை கண்டறிந்து, பயிற்சி அளித்து திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்குத் தேவையான தொழிலாளர்களை பணியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. திருப்பூரில் உள்ள பொதிகை மனிதவள மேம்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் சுந்தரேசன் கூறியதாவது: மாநில அளவில், கடந்த ஆண்டு நடந்த ஆய்வில், 18 முதல், 45 வயதுக்கு உட்பட்டவர்களில், 5.2 சதவீதம் பேர் வேலையில்லாமல் இருப்பதாகவும், தமிழகத்தில், 46 சதவீத மக்கள், வேலை செய்யவோ, வேலை தேடவோ தயாராக இருக்கின்றனர் என்றும் தெரியவந்துள்ளது. ராமநாதபுரம், கடலுார், கன்னியாகுமரி, துாத்துக்குடி மாவட்டங்களில் தொழிலாளர்கள் உபரியாக உள்ளனர்; வேலைவாய்ப்பு குறைவு. சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களில் வேலைவாய்ப்பு அதிகம்; தொழிலாளர் பற்றாக்குறை நிலவுகிறது. திருப்பூரில் பின்னலாடை தொழிலாளர்களுக்கான தேவை அதிகம். தொழிலாளர் வசதிக்காக, 30 நாட்களில் திறன் பயிற்சி அளித்து, வேலை வாய்ப்பில்லா மாவட்டங்களில் இருந்து தொழிலாளர்களை தயார் செய்யலாம். இளைஞர், இளம்பெண்களுக்கு, பாதுகாப்பான தங்குமிட வசதி கொடுக்க வேண்டும். திறன் மேம்பாட்டு திட்டம் வாயிலாக, திருப்பூருக்கான தொழிலாளர்களை திரட்டும் வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில், தொழில் அமைப்புகளுடன் ஆலோசித்து, இத்திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு, சுந்தரேசன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை