உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நடுக்கம் போக்கும் சேவை

நடுக்கம் போக்கும் சேவை

திருப்பூர்,; திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட், புது பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் ஆகிய இடங்களில் ஆதரவற்ற நிலையில் பிளாட்பாரங்களில், மார்கழி இரவில், குளிரில் நடுங்கிய படி உறங்கு வோரை தேடிச் சென்று போர்வை வழங்கும் சேவையை, 'ஜடாகா' தன்னார்வ அமைப்பினர் செய்து வருகின்றனர். கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த நபருடன் சென்று, ஆதரவற்றவர்களுக்கு போர்வை வழங்கினர்.இது குறித்து, ரிச்சி பிரதீப், டேவிட் ராஜா ஆகியோர் கூறுகையில், ''கடந்த கொரோனா சமயத்தில், தினமும் உணவு பொட்டலம் மற்றும் குடிநீர் பாட்டில் வழங்கினோம்.மார்கழி மாத கடுங்குளிரில், சாலையோரம் மிகுந்த சிரமத்துக்கு இடையே உறங்குவோரின் குளிர் தணிக்க எங்களால் இயன்ற உதவியை செய்கிறோம். கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில், 300 போர்வைகளை வழங்கியுள்ளோம்,'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ