முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு மரியாதை
உடுமலை; உடுமலை நகர பா.ஜ.,சார்பில், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், 100வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பஸ் ஸ்டாண்ட் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.நகர தலைவர் கண்ணாயிரம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் வடுகநாதன், கலா, மகளிர் அணி நிர்வாகி வித்யா, பிரசார அணி நிர்வாகி சின்ராஜ் பங்கேற்றனர்.