தீவிரவாதிகள் தாக்குதலில் பலியானோருக்கு அஞ்சலி
அனுப்பர்பாளையம் : தமிழ்நாடு அறிவியல் இயக்கம், திருப்பூர் வடக்கு ஒன்றியம் சார்பில், காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பெருமாநல்லுார் நால்ரோட்டில் நடந்தது. மாநில பொதுக்குழு உறுப்பினர் பிரேமா, தலைமை வகித்தார். கிளை செயற்குழு உறுப்பினர் முத்து சாமி, வரவேற்றார்.மெழுகுவர்த்தி ஏந்தி உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர். பலியானோர் படங்களுக்கு மலர் துாவிமரியாதை செலுத்தினர்.