உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருச்சி - பாலக்காடு ரயில் இயக்கம் மாற்றம்

திருச்சி - பாலக்காடு ரயில் இயக்கம் மாற்றம்

திருப்பூர்: திருச்சி - பாலக்காடு டவுன் பாசஞ்சர் (எண்:16843) நாளை மற்றும், வரும், 8ம் தேதி, திருப்பூர் வரை மட்டும் இயக்கப்படும். பயணிகள் வசதிக்காக திருப்பூரில் இருந்து பாலக்காடு டவுன் வரை சிறப்பு ரயில் இயக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் - வஞ்சி பாளையம் யார்டில், பொறியியல் மேம்பாட்டு பணி நடக்கிறது. இதனால், நாளை (4 ம் தேதி) மற்றும், 8ம் தேதி இரு நாட்களும் திருச்சி - பாலக்காடு டவுன் (எண்:16843) பாசஞ்சர் ரயில் திருச்சியில் இருந்து திருப்பூர் வரை மட்டும் இயக்கப்படும்.அதே நேரம், பொறியியல் மேம்பாட்டு பணி முடிவதற்கு ஏற்றார் போல் இரு நாட்களும், திருப்பூரில் இருந்து பாலக்காடு டவுன் வரை சிறப்பு பாசஞ்சர் ரயில் இயக்கப்படும்.இத்தகவலை, தெற்கு ரயில்வே, சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை