மேலும் செய்திகள்
பஸ் மோதி பலி
02-Aug-2025
திருப்பூர்: பழநி சத்திரப்பட்டியில், பிரதிஷ்டை செய்வதற்காக, திருமுருகன்பூண்டியில், 7.25 அடி உயரமுள்ள, திரிமுக கணபதி சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி அடுத்த சத்திரப்பட்டியில், பாம்பாட்டி சித்தர் பீடம் உள்ளது; அங்கு, விநாயகர் சதுர்த்தி நாளில், பெரிய விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபட திட்டமிடப்பட்டது. அதற்காக, திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் உள்ள ஒரு சிற்பக்கூடத்தில், 7.25 அடி உயரமுள்ள கருங்கல் சிற்பம் வடிவமைக்கப்பட்டது. சாமுண்டீஸ்வரி சிற்பக்கூடத்தில், ஐந்து பேர் கொண்ட சிற்பிகள், கடந்த ஆறு மாதமாக, சிலை வடிவமைப்பு பணிகளை மேற்கொண்டனர். சிற்பக்கூட உரிமையாளர் சண்முகம் கூறுகையில், ''சத்திரப்பட்டியில் உள்ள பாம்பாட்டி சித்தர் பீடத்தில், பிரதிஷ்டைசெய்ய, மூன்று முகம் கொண்ட சிலை கேட்டனர். அதற்காகவே, சிற்பசாஸ்திரங்களை பின்பற்றி, அற்புதமான ஆறு கரங்களுடன், அபய வரம் அருளும், திரிமுக கணபதி சிலை வடிவமைத்துள்ளோம். இது, வலம்புரி திரிமுக கணபதி சிலை என்பது கூடுதல் சிறப்பு. உரிய வழிபாடுகள் செய்து, திரிமுக கணபதி சிலை கோவிலுக்கு எடுத்துசெல்லப்பட்டது,'' என்றார்.
02-Aug-2025