ஒரு டன் குட்கா பறிமுதல் பல்லடத்தில் 2 பேர் கைது
பல்லடம் : பல்லடம், ஆலுாத்துப்பாளையம் பிரிவு அருகே வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டபோது, வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 750 கிலோ குட்கா பொருட்களைக் கண்டறிந்து பறிமுதல் செய்தனர். கர்நாடக மாநிலம், மாண்டியாவை சேர்ந்த ஹேமந்த் குமார், 26 என்பவரை கைது செய்தனர்.வடுகபாளையம்புதுார் ஊராட்சி, திருவள்ளுவர் நகர் பகுதியில், ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனையை சேர்ந்த வெங்கடேஸ்வரன், 28 என்பவர், பெங்களூருவில் இருந்து குட்கா பொருட்கள் வாங்கி, பாழடைந்த குடோனில் பதுக்கி வைத்து கடைகளுக்கு சப்ளை செய்து வந்தது தெரியவந்தது. அவர் கைது செய்யப்பட்டார். இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.