உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மகளிர் கல்லுாரியில் இருபெரும் விழா

மகளிர் கல்லுாரியில் இருபெரும் விழா

திருப்பூர்; திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரியில், அரிமா சங்கம் சார்பில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் நிறுவுதல் மற்றும் ஆசிரியர் தினவிழா ஆகியவை கல்லுாரியின் அரங்கில் நேற்று நடைபெற்றது. கல்லுாரி முதல்வர் வசந்தி தலைமை வகித்தார். வணிகவியல் மற்றும் கணிப்பொறி பயன் பாட்டுத் துறைத் தலைவர் சுப்புலட்சுமி வரவேற்றார். திருப்பூர் நிட்சிட்டி அரிமா சங்கம் சார்பில் கல்லுாரி முதல்வருக்கு 'நல்லாசிரியர்' விருது வழங்கப்பட்டது. அரிமா சங்க மாணவியர் தலைவியாக தர்ஷினி, துணைத்தலைவியாக தீபிகா, செயலாளராக மகாதர்ஷினி, பொருளாளராக அபர்ணா ஆகியோருக்கு அரிமா சங்க மாவட்ட தலைவர் ஆனந்தி பாஸ்கர் பதவியேற்பு செய்தார். அரிமா சங்க மாவட்ட துணை கவர்னர் சூரி நந்தகோபால் சிறப்புரையாற்றினார். அரிமா சங்கத் தலைவர் சந்திர சிங், செயலாளர்கள் கணேசன், சண்முகம், பொருளாளர் யாசின் அர்பத் ஹக்கீம் பங்கேற்றனர். கல்லுாரியில் இரண்டு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் பொருத்தப்பட்டு மாணவியர் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டது. கல்லுாரி நிர்வாக அலுவலர் நிர்மல்ராஜ், அரிமா சங்க நிர்வாகி பிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர். லாவண்யா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி