| ADDED : செப் 03, 2026 05:56 AM
காங்கேயம்:திருப்பூர்
மாவட்டம், காங்கேயம் அடுத்த படியூரை சேர்ந்தவர் சிவசுப்பிரமணி, 45,
எர்த் மூவர்ஸ் நடத்தி வருகிறார். இவர் கடந்த மாதம், 20ம் தேதி நிறுத்தி
வைத்திருத்த டிராக்டர் ஒன்றை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், நேற்று
போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, சந்தேகத்தின் பேரில் இருவர்
பிடிபட்டனர். அவர்கள் ஈரோடு மாவட்டம், விஜயமங்கலத்தை சேர்ந்த
சுதாகர், 45, மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த தீபக் குமார், 33, என
தெரிந்தது. இருவரும் டிராக்டர் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இருவரையும் போலீசார் கைது செய்தனர்.