வாசகர்கள் கருத்துகள் ( 1 )
போக்குவரத்து போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையில் வாகனங்கள் நிற
திருப்பூர்:வெள்ளகோவில் அருகே ரோட்டோரம் நின்ற லாரி மீது அரசு பஸ் மோதியதில், இருவர் உயிரிழந்தனர்; 12 பேர் காயமடைந்தனர்.திருச்சியில் இருந்து திருப்பூருக்கு அரசு பஸ் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. பஸ்சில், 50 பேர் இருந்தனர். சசிகுமார், 51, என்பவர் ஓட்டி வந்தார். நள்ளிரவு 12:00 மணிக்கு திருச்சி -- கோவை தேசிய நெடுஞ்சாலையில், திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே, குருக்கத்தி ரோட்டோரம் சிமென்ட் மூட்டை லோடுடன், நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் பஸ் மோதியது.இதில், அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை சேர்ந்த சிறுவன் பவின், 6, தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்த செந்தமிழ்செல்வன், 50, ஆகியோர் இறந்தனர்.பஸ் நடத்துநர் பாலசுப்பிரமணி, 50, உள்ளிட்ட 12 பேர் காயமடைந்தனர். அவர்கள் காங்கயம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.வெள்ளகோவில் போலீசார், நெடுஞ்சாலையில் லாரியை நிறுத்தி விபத்து ஏற்பட காரணமாக இருந்த லாரி டிரைவர் கார்த்திக், 44, மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
போக்குவரத்து போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையில் வாகனங்கள் நிற