உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உடுமலையில் பைக் விபத்து இரு மாணவர்கள் மரணம்

உடுமலையில் பைக் விபத்து இரு மாணவர்கள் மரணம்

உடுமலை:உடுமலை அருகே, குடிநீர் குழாய் பராமரிப்புக்கு தோண்டிய மண் திட்டில் பைக் மோதிய விபத்தில் கல்லுாரி மாணவர்கள் இருவர் பலியாகினர்.திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே சின்னவாளவாடியை சேர்ந்த பூவரசன், 20, பத்ரிகுமார், 20, கவுதம், 20, ஆகியோர் அரசு கல்லுாரியில், இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தனர்.நேற்று முன்தினம் இரவு, ஒரே பைக்கில் மூன்று பேரும், பழையூரிலிருந்து வாளவாடிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, ரோட்டோரத்தில் குடிநீர் குழாய் சரி செய்வதற்காக தோண்டப்பட்டிருந்த மண் திட்டின் மீது மோதி கீழே விழுந்தனர்.தலையில் பலத்த காயமடைந்த பூவரசன், பத்ரி குமார் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலத்த காயமடைந்த கவுதம் உடுமலை அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை