உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இரு கிராம மக்கள் கோரிக்கை

இரு கிராம மக்கள் கோரிக்கை

உடுமலை, ; உடுமலை அருகே, நெகமம்-சிந்திலுப்பு ரோட்டில் இருந்து, நஞ்சேகவுண்டன்புதுார் மற்றும் விருகல்பட்டி கிராமங்களுக்கான இணைப்பு ரோடு பிரிகிறது. இந்த நால்ரோடு சந்திப்பில் வேகத்தடை மற்றும் போதிய எச்சரிக்கை பலகை இல்லை. இதனால், இணைப்பு ரோடுகளில் இருந்து மெயின்ரோட்டில் இணையும் வாகனங்கள் விபத்துக்குள்ளாவது அதிகரித்துள்ளது. இது குறித்து, நஞ்சேகவுண்டன்புதுார் மற்றும் விருகல்பட்டிபுதுார் கிராம மக்கள் நெடுஞ்சாலைத்துறைக்கு அனுப்பியுள்ள மனுவில், 'நெகமம் பகுதியில் இருந்து மெயின்ரோட்டில் வேகமாக வரும் வாகனங்களால், நால்ரோட்டில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே, அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்' என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ