டூவீலர்கள் ஏலம்
திருப்பூர்: திருப்பூர் மாநகரில் பல்வேறு போதை பொருட்கள் கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட, 27 டூவீலர், மூன்று, நான்கு சக்கர வாகனங்கள் நல்லுார் ஆயுதப்படை வளாகத்தில் 24ம் தேதி ஏலம் விடப்பட உள்ளது. வாகனங்களை பார்வையிட விருப்பமுள்ளவர்கள் 22ம் தேதி காலை, 11:00 முதல் மாலை, 4:00 மணி வரை நேரில் வந்து பார்வையிடலாம். ஏலத்தில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் காப்பு தொகையாக, 500 ரூபாயை, திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.