உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உச்சிமாகாளியம்மன் கோவில் திருவிழா

உச்சிமாகாளியம்மன் கோவில் திருவிழா

உடுமலை; மடத்துக்குளம், கணியூர் அரியநாச்சிபாளையம் புதுார் மடத்தில் எழுந்தருளியுள்ள உச்சிமாகாளியம்மன் கோவில் திருவிழா, வரும், 21ம் தேதி, விநாயகர் பொங்கல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. தொடர்ந்து, 22ம் தேதி, துர்க்கையம்மன் வடிசோறு, 23ம் தேதி, இரவு மினியப்பன் பொங்கல் மற்றும் உச்சிமாகாளியம்மன் சாட்டுதல் நிகழ்ச்சிகள் நடக்கிறது.29ம் தேதி, அமராவதி ஆற்றிலிருந்து தீர்த்தம் கொண்டு வருதல், இரவு, அம்மன் அழைத்தல் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடக்கிறது. 30ம் தேதி, பூவோடு எடுத்தல், மாவிளக்கு, பொங்கல் திருவிழாவும், மே 1ம் தேதி, பொது அபிேஷகமும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ