உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  நெடுஞ்சாலையில் அனுமதியற்ற பேனர்: மாதக்கணக்கில் அகற்றப்படாத அவலம்

 நெடுஞ்சாலையில் அனுமதியற்ற பேனர்: மாதக்கணக்கில் அகற்றப்படாத அவலம்

பல்லடம்: பல்லடத்தில் உள்ள தேசிய, மாநில நெடுஞ் சாலைகள், வாகன போக்குவரத்து நிறைந்த முக்கிய வழித்தடங்களாக உள்ளன. இந்த நெடுஞ்சாலைகளில், அனுமதியின்றி பிளக்ஸ் பேனர்கள் வைப்பது அதிகரித்து வருகிறது. அதுவும், நிகழ்ச்சிகள், விழா முடிவடைந்த பின்னரும் பேனர்கள் அகற்றப்படுவது கிடையாது. மாதக்கணக்கில் அவை அகற்றப்படாததால், விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது. மேலும், இவ்வாறு அனுமதி இன்றி பேனர்கள் வைக்கலாம் என்பதற்கு அவை உதாரணமாக உள்ளன. சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் பேனர்களை அகற்றாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால், நகரப்பகுதியில் எங்கு பார்த்தாலும், பேனர்கள் ஆக்கிரமித்துள்ளன. எனவே, விதி மீறல்களுக்கு துணை போகாமல், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ