மாநகராட்சி பள்ளியில் சீருடை வழங்கும் விழா
திருப்பூர்:திருப்பூர், புதுராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி துவக்கப் பள்ளியில், சாரண சாரணியர் இயக்கத்தின், புதிய குழு துவங்கப்பட்டுள்ளது. 24 மாணவ, மாணவியருக்கு தேவையான சீருடைகளை வினோத் என்பவர் நலத்திட்ட உதவியாக வழங்கினார்.இந்நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் (பொறுப்பு) மோகன் வரவேற்றார். இரண்டாம் மண்டல தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். பள்ளி வளர்ச்சிக்குழு பொறுப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.