உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அங்கன்வாடி குழந்தைகளுக்கு சீருடை

அங்கன்வாடி குழந்தைகளுக்கு சீருடை

உடுமலை; உடுமலை சுற்றுப்பகுதி அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு சீருடைகள் வினியோகிக்கப்பட்டுள்ளன.உடுமலையில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், 136 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு சத்துணவு மற்றும் முட்டைகளும் வழங்கப்படுகின்றன.மேலும், அவர்களின் எடை மற்றும் உயரம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. நடப்பாண்டில் இந்த மைய குழந்தைகளுக்கு சீருடைகளும் வழங்கப்பட்டுள்ளன. மையங்களில் இரண்டு முதல் ஆறு வயது வரை உள்ள குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனர்.ஒரு குழந்தைக்கு இரண்டு செட் வீதம், ஒவ்வொரு மையத்துக்கும் சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு பின், அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கும் சீருடைகள் வழங்கப்பட்டுள்ளதால் பெற்றோரும் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ