மேலும் செய்திகள்
இரவு -- பகல் எப்பொழுதும் அஞ்சல் சேர்ந்திடும்
08-Oct-2024
n ஆன்மிகம் nபுரட்டாசி திருவிழா நிறைவுவெங்கடேச பெருமாள் கோவில், மொண்டிபாளையம், சேவூர், அவிநாசி. மகா அபிேஷகம், திருமஞ்சனம் - அதிகாலை 5:00 மணி. ஸ்ரீ செல்வ விநாயகர் பஜனைக் குழுவினரின் நாமசங்கீர்த்தனம் - காலை 10:00 முதல், மதியம், 1:00 மணி வரை. கருட வாகனத்தில் சுவாமி திருவீதியுலா புறப்பாடு - இரவு 7:30 மணி.சிறப்பு பஜனைஸ்ரீ வியாசராஜர் பஜனை மடம், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. பாண்டியன் நகர் அம்மன் பஜனை குழு நடத்தும் இன்னிசை நிகழ்ச்சி - மாலை 6:30 மணி.சிறப்பு பூஜைஐப்பசி மாத கிருத்திகையை முன்னிட்டு, முத்துக்குமார பால தண்டாயுதபாணி கோவில், அலகுமலை. ஆஞ்சநேயர் அபிேஷகம், அலங்காரம் - மாலை 5:00 மணி. அன்னதானம் - மாலை 6:00 மணி.n முத்துக்குமார சுவாமி கோவில், மாதப்பூர், பல்லடம். சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜை - மாலை 5:00 மணி. ஆன்மிக சொற்பொழிவு - மாலை 6:30 மணி. சுவாமி திருவீதி உலா, அன்னதானம் - இரவு 7:00 மணி.n ஸ்ரீசெந்திலாண்டவர் சன்னதி, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. சிறப்பு அபிேஷகம், காலை, 11:00 மணி. மயில் வாகனத்தில் சுவாமி திருவீதியுலா - மாலை, 6:00 மணி.திருக்கல்யாண உற்சவம்ஸ்ரீ காரணப் பெருமாள் கோவில், ஸ்ரீ தேவி, பூ தேவி கோவில், அக்ரஹாரபுத்துார், மங்கலம். திருக்கல்யாண வைபவம் - காலை 10:30 முதல், 11:30 மணி வரை. காட்டு கோவிலில் இருந்து வீட்டு கோவிலுக்கு சாமி புறப்படுதல் - இரவு, 8:00 மணி.n பொது nரேஷன் குறைகேட்பு முகாம்தண்டுக்காரன்பாளையம் (அவிநாசி), கெத்தல்ரேவ் (தாராபுரம்), வி.வடுகபாளையம் (காங்கயம்), பொங்கலுார், செட்டிபாளையம் (திருப்பூர் வடக்கு), மாணிக்காபுரம் (திருப்பூர் தெற்கு), குடிமங்கலம், கவுத்தாம்பாளையம் (ஊத்துக்குளி) தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம். ஏற்பாடு: குடிமை பொருள் வழங்கல் துறை. காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை.சிறப்பு கருத்தரங்கம்'வெற்றிக்கு வித்திடுவோம்' எனும் தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம், கலாம் அரங்கம், காங்கயம் குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன்ஸ், நத்தக்காடையூர், காங்கயம். ஏற்பாடு: ரோட்டரி கிளப் ஆப் காங்கயம் டவுன். பங்கேற்பு: முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர பாபு, கல்வியாளர் அஷ்வின். காலை 9:30 மணி.யோகாசன பயிற்சியோகா பயிற்சி, மனவளக்கலை மன்றம், பெரியார் காலனி, திருப்பூர். அதிகாலை, 5:30 முதல், 7:30 மணி வரை.n எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை மையம், கொங்கு நகர், திருப்பூர். அதிகாலை, 5:30 முதல், 7:30 மணி வரை.n விளையாட்டு nகோ கோ போட்டி'கேலோ இந்தியா' லீக் சீனியர் பெண்கள் கோகோ போட்டி, ஸ்ரீ வாணி இன்டர்நேஷனல் பள்ளி, பல்லடம். ஏற்பாடு: மாநில கோகோ அசோசியேஷன், கோவை மாவட்ட கோ கோ சங்கம். காலை 9:00 மணி முதல்.கேரம் போட்டிமாணவ, மாணவியர், 14, 17, மற்றும், 19 வயதினருக்கான மாவட்ட கேரம் போட்டி, பில்டர்ஸ் இன்ஜி., கல்லுாரி, காங்கயம் இன்ஸ்டிடியூட் ஆப் காமர்ஸ், நத்தக்காடையூர், காங்கயம். ஏற்பாடு: பள்ளி கல்வித்துறை. காலை 10:00 மணி.பல்லடம், அக். 19---பல்லடம் ஒன்றிய குழு கவுன்சிலர்கள் கூட்டம், ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி தலைமை வகித்தார். பி.டி.ஓ., கனகராஜ் முன்னிலை வைத்தார். தீர்மானங்கள் வாசிப்பதற்கு முன்பு, 5வது வார்டு கவுன்சிலர் ரவிச்சந்திரன், 'வருவாய் துறை சார்பில் அலுவலர்கள் யாரேனும் கூட்டத்துக்கு வந்துள்ளார்களா?' என, இடைமறித்து கேள்வி எழுப்பினார்.அவர் பேசுகையில், ''அருள்புரம் - -உப்பிலிபாளையம் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ரோட்டை விரிவுபடுத்த வேண்டும் என, கடந்த ஆறு மாதமாக வலியுறுத்தி வருகிறேன். ஒப்புதலும் கிடைக்கப்பெற்ற நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றி அளவீடு செய்து தருமாறு, வருவாய்த் துறையிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஐந்து முறை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தாசில்தாரிடம் கேட்டதற்கு, கட்டணம் செலுத்தி அளவீடு செய்து கொள்ளலாம் என்றார்.''நில அளவைத் துறையில் கேட்டால், எங்களுக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை என்கின்றனர். பொது வழித்தடத்துக்கான அளவீடு மேற்கொள்ள கட்டணத்தை யாரிடம் செலுத்துவது என்று அதிகாரிகளுக்கே தெரியவில்லை. அளவீடு பணிக்கு அனுமதி வாங்கவே, ஆறு மாதம் கடந்து விட்டது. ஒன்றிய குழு கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால், வருவாய் துறை அதிகாரிகள் யாரும் கூட்டத்துக்கு வருவதில்லை. எனில், எவ்வாறு பிரச்னைக்கு தீர்வு காண்பது? எனவே, இக்கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும்'' என்றார்.ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, ''வருவாய் துறையை கண்டித்து இக்கூட்டம் ரத்து செய்யப்படுகிறது. வருவாய் துறையின் பங்கேற்புடன், அடுத்த கூட்டத்துக்கான அறிவிப்பு பின் வெளியிடப்படும்,'' என்றார்.பொது வழித்தடத்துக்கான அளவீடு மேற்கொள்ள கட்டணத்தை யாரிடம் செலுத்துவது என்று அதிகாரிகளுக்கே தெரியவில்லை. அளவீடு பணிக்கு அனுமதி வாங்கவே, ஆறு மாதம் கடந்து விட்டது.
08-Oct-2024