ஒ ற்றுமை வலிமையாம்
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில், கிட்டத்தட்ட, 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம், 50 லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரம் சார்ந்த ஒரு தேவைக்கான கோரிக்கை தான் அத்திக்கடவு - அவிநாசி நீர்செறிவூட்டும் திட்டம்.விவசாயிகளும், பொதுமக்களும் ஒற்றுமையுடன் கை கோர்த்தனர். ஆர்ப்பாட்டம், போராட்டம், முற்றுகை, உண்ணாவிரதம் என, பலகட்ட போராட்டங்களின் விளைவாக, அனைத்து அரசியல் கட்சிகளின் கவனமும் திட்டத்தின் மீது திரும்பியது. அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரத்தில் வலுவாக இடம் பெற்றது.அ.தி.மு.க., ஆட்சியின் போது, 1,656 கோடி ரூபாய் செலவில் திட்டப்பணி துவங்கியது. ஓராண்டில் முடிய வேண்டிய திட்டம் கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல காரணங்களால், 4 ஆண்டுகளில் முடிந்தது; ஆட்சி மாறிய போதும், 1,914 கோடி ரூபாய் மொத்த மதிப்பில் திட்டத்தை முடித்து வைத்தது தி.மு.க., அரசு.'ஒற்றுமேயே வலிமையாம்' என்ற பாரதியின் கூற்று நிஜம்தானே!